பிரளயத்தை வெடிக்க வைத்த TNPSC-ல் கேட்ட 2 கேள்விகள்

Update: 2025-09-01 10:28 GMT

மீண்டும் சர்ச்சையை கிளப்பிய டி.என்.பி.எஸ்.சி. வினாக்கள்

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய இளநிலை உதவி வரைவாளர் பணிக்கான தேர்வில், அய்யா வைகுண்டர் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அய்யா வைகுண்டர் சம்பந்தப்பட்ட கேள்விக்கான ஆங்கில மொழிபெயர்ப்பில், முத்துக்குட்டி என்று அழைக்கப்பட்ட அவர், முடிதிருத்துவதற்கான இறைவனாக அறியப்பட்டார் என்று பொருள்படும் வகையில் வாசகம் இடம்பெற்றிருந்தது. இதேபோல, மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக ஐ.நா.விடம் இருந்து விருதை பிச்சையாக பெற்றதாக அர்த்தம் கொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்