191 KM சூறாவளி... நினைத்தே பார்க்க முடியா இயற்கையின் கோர தாண்டவம்
தெற்கு தைவானில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் உள்ள மேற்கூரைகள் கடுமையாக சேதமாகின. மணிக்கு 191 கிலோ மீட்டர் தூரத்தில் வீசிய சூறைக்காற்றினால், பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த நிலையில், டைடுங் பகுதியில் வீசிய காற்றில் ஒரு கட்டிடத்தின் மீது இருந்த சோலார் பேனல் கிழித்தெறியப்பட்டது. இந்த மழை பாதிப்புக்கு மத்தியில் ஒருவர் காணாமல் போனதாகவும், 33 பேர் காயமடைந்ததாகவும் தைவான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான விமானங்கள் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டன.