Test Cricket | Bumrah |டெஸ்ட் கேப்டன்ஷிப்பை நிராகரித்தது ஏன்? - முதல்முறையாக மவுனம் கலைத்தார் பும்ரா
டெஸ்ட் கேப்டன் பதவிக்கு பி.சி.சி.ஐ. தன்னை பரிசீலித்ததாகவும், தாம் தான் அதனை நிராகரித்ததாகவும்
வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியின்போது ரோகித் மற்றும் விராட் ஓய்வை அறிவித்த நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜஸ்ப்ரீத் பும்ரா தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் தேர்வானார். இந்நிலையில் இது குறித்து பேசிய பும்ரா, தனது மருத்துவ சிகிச்சை மற்றும் வேலைப் பளு குறித்து
பிசிசிஐ-யிடம் பேசியதாகவும், அப்போது தலைமை பொறுப்பு வேண்டாம் என்று கூறியதாகவும் தெரிவித்தார். மேலும், முழுமையாக 5 டெஸ்ட் போட்டிகளில் தம்மால் விளையாட முடியுமா என்பது தெரியாததால், அணியின் நலன் கருதியே கேப்டன்ஷிப் பதவியை மறுத்ததாகவும் கூறியுள்ளார்.