கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 399வது வெற்றி - ஜோகோவிச் அசத்தல்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 399வது வெற்றி - ஜோகோவிச் அசத்தல்
400 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வென்ற முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையை டென்னிஸ் வீரரான ஜோகோவிச் விரைவில் நிகழ்த்த இருக்கிறார். தற்போது கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடி வரும் 38 வயதான ஜோகோவிச், இரண்டாவது சுற்றில் இத்தாலியின் பிரான்செஸ்கோ மேஸ்ட்ரெல்லிஐ (Francesco Maestrelli) 6க்கு 3, 6க்கு 2, 6க்கு 2 என்ற நேர் செட்களில் வென்று அசத்தியதன் மூலம் தனது 399வது கிராண்ட்ஸ்லாம் வெற்றியை பதிவு செய்தார்.
இந்த நிலையில், அவர் தனது 25வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
Next Story
