கனிமொழி கேட்ட கேள்வி - தமிழகத்திற்கே ஹேப்பி நியூஸ் சொன்ன மத்திய அரசு

Update: 2025-08-22 03:20 GMT

2027-க்குள் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் செயல்பாட்டுக்கு வரும்

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் முழு திறனுடன் செயல்பாட்டுக்கு வரும் என திமுக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தொடர்பாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக பதிலளித்தார்.

அதில், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தை பொறுத்தவரை, கிழக்கு கடற்கரை சாலைக்கு மாற்றாக கையகப்படுத்த வேண்டிய நிலம் தவிர மற்ற நிலம் கையகப்படுத்திவிட்டதாக கூறினார்.

மேலும், ஏவுதள மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்து தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டதாகவும்,

கட்டமைப்புப் பணிகள் வெவ்வேறு மையங்களில் நடைபெற்று வருவதாகவும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்தார்.

அந்த வகையில், வரும் 2026-27 நிதியாண்டில் முழுமையாக ஏவுதளம் இயங்கத் தொடங்கும் என கூறிய அவர்,

இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி 985 கோடி ரூபாயில், 389 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்