Wonderla Holidays| வொண்டர்லா ஹாலிடேஸ் நிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்கா திறப்பு
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில், வொண்டர்லா ஹாலிடேஸ் Wonderla Holidays நிறுவனத்தின் பொழுதுபோக்குப் பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருப்போரூரில், 611 கோடி ரூபாய் முதலீட்டில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வொண்டர்லா ஹாலிடேஸ் Wonderla Holidays நிறுவனம் அமைத்துள்ள பொழுதுபோக்குப் பூங்காவை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர், காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.