Minister anbil mahesh || ``யார் அமைச்சர் அன்பில் மகேஷா?’’ பஸ்ஸில் ஏறியதும் இன்ப அதிர்ச்சியான பெண்கள்
பொதுமக்களுடன் 5 கி.மீ மினி பேருந்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பயணம்
நாகையில் பொது மக்களுடன் 5 கிலோ மீட்டர் வரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மினி பேருந்தில் பயணம் செய்து சிற்றுந்து சேவையை கள ஆய்வு மேற்கொண்டார்.
கீழ்வேளூரில் இருந்து வடக்காலத்தூர் வழியாக ஒரத்தூர் மருத்துவக்கல்லூரிக்கு சென்ற அந்த மினி பேருந்தில் ஏறிய பெண்களுக்கு வணக்கம் வைத்து அமைச்சர் அவர்களை வரவேற்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மீன்வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.