"என்னாச்சு? ஹாஸ்பிடல் போகிறீர்களா?" - பேரவையில் துரைமுருகனை நலம் விசாரித்த முதல்வர்
சட்டப்பேரவையில், தடுமாறி கீழே விழ இருந்த அமைச்சர் துரைமுருகனை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உட்பட உடனிருந்தவர்கள் கீழே விழாமல் தாங்கி பிடித்தனர். அதன்பிறகு, துரைமுருகனை மற்றவர்கள் கைத் தாங்கலோடு பிடித்துக் கொண்ட நிலையில், அவர் தனது இருக்கையில் போய் அமர்ந்து கொண்டு இயல்பு நிலைக்கு திரும்பினார். இந்த சம்பவம் நடந்து முடிந்த பின்பு, சபைக்குள் வந்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகனிடம் நலம் விசாரித்து, மருத்துவமனைக்கு போகிறீர்களா? எனக் கேட்டார். இதற்கு, துரைமுருகனோ, தற்போது தனது உடல்நிலை நன்றாக உள்ளதாக பதிலளித்தார்.