பண மதிப்பிழப்பின்போது தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, தாங்கள் மருத்துவ தொழிலில் நியாயமாக சம்பாதித்ததாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தனியார் செவிலியர் கல்லூரி விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், செவிலியர்களை கற்பூரத்துடன் ஒப்பிட்டு, அவர்கள் அமைதியாக மற்றவர்களுக்கு தியாக உள்ளத்துடன் பணியாற்றுவதாகவும் கூறினார்.