வக்பு சட்டத் திருத்தம் - காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
வக்பு சட்ட திருத்தத்தை அமல்படுத்தியதை கண்டித்தும், பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், சைதாப்பேட்டையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், வக்பு சட்ட திருத்தம், இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், இந்த சட்ட திருத்தம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கும் என்றும் தெரிவித்தனர்.