Union Govt | Waqf | "வக்ஃபு இஸ்லாத்தில் அத்தியாவசிய பகுதி அல்ல" - மத்திய அரசு
வக்ஃபு இஸ்லாத்தில் அத்தியாவசியமாக பின்பற்றப்படும் பழக்கம் அல்ல என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதத்தை முன்வைத்தது. வக்ஃபு சட்டத் திருத்தத்தை எதிர்த்த ரிட் மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவய் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. அந்த வகையில், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, வக்ஃபு சொத்துகளை பறிக்கவே வக்ஃபு சட்டத் திருத்ததம் கொண்டு வரப்பட்டுள்ளதான வாதம் தவறானது என்றும் அரசின் சொத்துக்களை அரசுதான் பாதுகாக்க வேண்டும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு உள்ளது என்றும் கூறினார். மேலும், இருதரப்பு சொத்துக்களும் வருவாய் துறை ஆவணங்களை கொண்டு சரிபார்க்கப்படும் என்றும் அவர் வாதங்களை முன் வைத்தார்.