தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வெள்ளி சந்தையில் பகுதியில் தேமுதிக மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம நடைபெற்றது. இதில், விஜய பிரபாகரனுக்கு கழக இளைஞரணி செயலாளராகவும், எல்.கே சுதீஷ்க்கு கழகப் பொருளாளராகவும் பொறுப்புகள் வழங்கப்பட்டன. இதன் பிறகு, ஸ்ரீ புதூர் பொன் மாரியம்மன் கோயிலில் அம்மனை அவர் தரிசனம் செய்தார். அப்போது அங்கிருந்த அக்கட்சியின் தொண்டர்கள், பிரேமலதா விஜயகாந்த், விஜயபிரபாகரன் உள்ளிட்டோருக்கு கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழித்த வீடியோ தற்போது வைரலாகிறது.