மக்கள் ஆதரவு தந்தால் ஜெயலலிதாவை விட பத்து மடங்கு பெரிய ஆளுமையாக பிரேமலதா விஜயகாந்த் வருவார் என்று தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கைகாட்டி பகுதியில் அக்கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விஜய பிரபாகரன், ஒரு நடிகராக இருந்தால்தான் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க முடியும் என்றால், தாம் நடிகனாகவும் தயாராக இருப்பதாக கூறினார்.