அண்ணாமலை, சீமான், விஜய்.. வரிசையாக பெயரை சொல்லி அதிரவிட்ட விஜயபிரபாகரன்
இன்று எத்தனையோ புதிய கட்சிகள் வந்தாலும், தேமுதிக எப்போதும் பலமாகவே உள்ளதாக அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தேமுதிக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற விஜய பிரபாகரன் பேசும்போது, தேமுதிக அழிந்துவிட்டதாக சிலர் தப்புக்கணக்கு போடுகின்றனர். அதற்கு காரணம் தேமுதிக-வின் மீதுள்ள பயம் தான் என கூறினார்.