"இந்த கட்சி எப்படி வளரும்.. அறிவுள்ளவர்கள கூட வச்சுகோங்க.." வெடித்து பேசிய தவெகவினர் | TVK | VIJAY
"இந்த கட்சி எப்படியா வளரும்..
Pls அறிவுள்ளவர்கள கூட வச்சுகோங்க.." பொதுக்கூட்ட இடத்திலேயே வெடித்து பேசிய தவெகவினர்
விழுப்புரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து வந்த தங்களை த.வெ.க புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் நகராட்சி மைதானத்தில் த.வெ.க கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் வருகை தந்த நிலையில், சில காரணங்களால் மாற்று கட்சியில் இருந்து த.வெ.கவிற்கு வந்தவர்களின் வரவேற்பை ஏற்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தனர்