Vijay Speech | Tvk Madurai Manadu | மதுரை மாநாட்டில் பேசிய விஜய்க்கு இலங்கையில் இருந்து வந்த பதிலடி

Update: 2025-08-28 03:16 GMT

தவெக 2வது மாநாட்டில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என விஜய் பேசியிருந்தார்.

இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பதிலளித்தார்.

தென்னிந்தியாவில் தேர்தல்காலம் என்பதால், ஒவ்வொருவரும் ஒரு கருத்தை கூறிவருவதால், அதனை பொருட்படுத்த தேவையில்லை என்றார்.

ராஜதந்திர மட்டத்தில் கருத்து வெளியிட்டிருந்தால், அதற்கு கவனம் செலுத்தலாம் என்றும் அவர் கூறினார்.

கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்