``தவெகவுக்கு உயர்ந்த வாக்கு சதவீதம்'' - விஜய் டேபிளில் PK-வின் சர்வே ரிப்போர்ட்

Update: 2025-02-12 02:23 GMT

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மேற்கொண்ட சர்வே முடிவுகளை, தவெக தலைவர் விஜய்யிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வழங்கியுள்ளனர். விஜய்யுடனான சந்திப்புக்கு பின்னர், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி மற்றும் பொதுச்செயலாளர் ஆனந்த் உடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை மேற்கொண்டார். இதில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் கட்சி ரீதியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து அவர் அறிக்கை வழங்கியதாக தெரிகிறது. அந்த அறிக்கையை, பையனூரில் படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம், ஆனந்த் உள்பட முக்கிய தலைவர்கள் வழங்கியுள்ளனர். அதன்படி தவெக-வின் வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பதாகவும், தவெக கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகள், செல்வாக்கு மிக்க பகுதிகள் உள்ளிட்டவை குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்