அஜித் வீட்டிலே விட்டு சென்ற விஜய்.. விஜய் காரை பைக்கில் சேஸ் செய்து பிடித்த புஸ்ஸி ஆனந்த் - பரபரப்பு
திருப்புவனத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தாரிடம் நலம் விசாரித்துவிட்டு காரில் புறப்பட்டு சென்ற விஜய்யை, த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் பைக்கில் சேஸ் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித்குமாரின் வீட்டில் ஏராளமானோர் குவிந்ததால், வீட்டில் இருந்து வந்த விஜய், காரில் ஏறி உடனே புறப்பட்டு சென்றார். அதன்பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த ஆனந்த், கார் இல்லாததை பார்த்து வேகமாக நடக்கத் தொடங்கினார். அவரை பைக்கில் அழைத்துச் செல்ல ஒருவர் வந்தபோது, பைக்கை தானே ஓட்டுவதாக வாங்கினார். பின்னர், ஹெல்மெட் இல்லையா என கேட்ட ஆனந்த், ஹெல்மெட் போடாமலேயே வேகமாக சேஸ் செய்து, விஜய்யின் காரில் ஏறி சென்றார்.