வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் 131வது புதிய கிளை திருச்சி முசிறியில் கோலாகலமாக திறக்கப்பட்டது...
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வசந்த் அண்ட் கோ நிர்வாக இயக்குநர்களின் ஒருவரான வினோத் வசந்தகுமார் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்... மேலும் இந்நிகழ்வில்,
முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், வசந்த் அன்ட் கோ ஊழியர்கள் மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அதேபோல் தென்காசி மாவட்டம் சுரண்டையில் வசந்த் அண்ட் கோவின் 132வது கிளையின் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழ்ச்செல்வி வசந்தகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்... முதல் விற்பனையை சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகனுக்கு வழங்கினார்.... இந்நிகழ்வில் தென்காசி எம்.எல்.ஏ பழனி நாடார், திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் மற்றும் முன்னாள் நெல்லை எம்.பி ராமசுப்பு, ஆகியோர் கலந்து கொண்டனர்.