டெல்லிக்கு வரும் இந்தியாவின் மருமகன் - ராஜ விருந்து கொடுக்க காத்திருக்கும் PM மோடி
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் நான்கு நாள் பயணமாக இன்று இந்தியா வருகை தர உள்ளார். அவரது மனைவியும், இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்டவருமான உஷா, 3 குழந்தைகளும் வர உள்ளனர். டெல்லி வருகை தரும் அவர்கள், ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ரா உள்ளிட்ட நகரங்களை சுற்றி பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்க உள்ளார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் வரி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.