தம்பிதுரை மைக் பிடித்து பேசமுற்றி மோதிய வாய் சண்டை கிருஷ்ணகிரியில் சலசலப்பு
அதிமுக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை கலந்து கொண்ட கட்சிக்கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த விழாவில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை கலந்து கொண்டார். அவர் மைக்கில் பேசிக் கொண்டிருந்த போதே , நிர்வாகிகளுக்குள் வாக்குவாதம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.