தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.