TVK Vijay | L.Murugan | "பல உண்மை ஒளிந்துள்ளது.. மக்களே சொல்றாங்க.." - பகிரங்கமாக சொன்ன எல்.முருகன்
ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அரசியல் செய்வதாக பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். கரூருக்கு வந்த பாஜக குழுவினர் ஏன் மணிப்பூருக்கு செல்லவில்லை என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர், கச்சத்தீவு விவகாரத்திலும், கள்ளக்குறிச்சி விவகாரத்திலும் மௌனமாக இருந்த திமுகவினர் கருர் விவகாரத்தில் அரசியல் செய்வதாக சாடினார்.