Tvk Vijay | Seeman | தவெக தலைவர் விஜய்க்கு, சீமான் பிறந்த நாள் வாழ்த்து
தவெக தலைவர் விஜய்க்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, என எல்லா ஆற்றல்களையும் வளர்த்துக்கொண்டு மக்களை மகிழ்வித்து, தமிழ்த்திரைத்துறையில் உச்சம் தொட்ட ஆகச்சிறந்த திரைக்கலைஞன் என்று விஜய்க்கு புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் தவெக தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கு என்னுடைய இதயபூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள் என்றும் சீமான் பதிவிட்டுள்ளார்.