TVK Karur Stampede | தீயாய் பரவிய வீடியோ | பாய்ந்த அதிரடி வழக்கு | விஜய்யின் பிரசார வாகனம் பறிமுதல்?

Update: 2025-10-05 11:09 GMT

தவெக தலைவர் விஜய்யின் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது... கரூரில் விஜய் பிரசாரத்தின் போது விஜய் வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளான காட்சிகள் சமூகவலைதளங்களில் அதிகம் பரவின. சென்னை உயர்நீதிமன்றமும் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா? விஜயின் பிரச்சார வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில், கரூர் தவிட்டுப்பாளையம் சோதனை சாவடி அருகே சம்பவம் நடந்ததை கண்டறிந்த போலீசார் விஜய்யின் வாகன ஓட்டுனர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்த கட்டமாக விஜயின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்