TVK Candidates | "தவெகவின் வேட்பாளர்கள்"- கொஞ்சம் கூட தயங்காமல் புஸ்ஸி ஆனந்த் சொன்ன வார்த்தை
"விஜய் யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் வேட்பாளர்"
வரும் தேர்தலில், த.வெ.க தலைவர் விஜய் யாரை கை காட்டி அறிவிக்கிறாரோ அவர்தான் வேட்பாளர் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். சென்னை, பனையூரில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், தொகுதி மக்களிடம் முகம் பதியும்படி களப்பணி ஆற்ற அறிவுறுத்தி உள்ளார். மேலும், மாவட்டங்களில் இருக்கக்கூடிய முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டவர்களை கட்சிகளில் இணைத்து பொறுப்புகள் வழங்கக்கூடிய பணியில் ஈடுபடுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.