"உண்மையான முருக பக்தர்கள் அங்கு செல்ல மாட்டார்கள்" - அமைச்சர் சேகர்பாபு
"உண்மையான முருக பக்தர்கள் அங்கு செல்ல மாட்டார்கள்" - அமைச்சர் சேகர்பாபு
மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டிற்கு உண்மையான முருக பக்தர்கள் செல்ல மாட்டார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை, துறைமுகம் தொகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் சேகர் பாபு பத்திரிகையாளர்களை சந்தித்த போது, மதுரை முருகன் மாநாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, முருகன் மாநாடு ஜாதி மற்றும் மத ரீதியில் நடைபெறும் காரணத்தை முன்னிட்டு, வாய்ப்பிருந்தால் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்