Tiruchi Siva Announcement | அதிரடி சம்பவத்திற்கு தயாராகும் திருச்சி சிவா
கீழடி விவகாரம்.. திருச்சி சிவா அறிவிப்பு
கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடவில்லை என்றால் நாடாளுமன்றத்தை முடக்குவோம் என திருச்சி சிவா எம்.பி., தெரிவித்துள்ளார். கீழடி அகழாய்வை அங்கீகரிக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து மதுரையில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய திருச்சி சிவா எம்.பி., ஹரப்பா நாகரீகத்திற்கு முன் தமிழர் நாகரீகம் இருந்துள்ளது. அகழாய்வு மூலம் தெரிய வந்துள்ளது என்றார். மேலும், மத்திய அரசு தமிழ்நாடு மீது பண்பாட்டு போர் தொடுத்துள்ளதாக கூறிய அவர், அகழாய்வை முடிவுகளை மத்தியஅரசு வெளியிடவில்லை என்றால் நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் மூடக்குவோம். தமிழர்களின் வரலாற்றை மறைக்க மத்திய அரசு யார்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.