திருச்சியில் உள்ள தலைவர்களின் மணிமண்டபங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பணியாளர்கள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பெரும்பிடுகு முத்தரையர், நீதிக் கட்சியின் மூத்த தலைவர் ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோரின் மணிமண்டபங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அந்த வளாகத்தில் காவலர்கள், நூலகத்தில் நூலகர்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், மணி மண்டபம் முழுவதும் செடி, கொடிகள் படர்ந்திருந்ததைக் கண்டு அதிருப்தி தெரிவித்தார். மணிமண்டப வளாகத்தை தூய்மையாக பரமாரிக்க மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மாநகராட்சி ஊழியர்கள், ஜேசிபி எந்திரம், டிராக்டர்களைக் கொண்டு தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.