TN Congress | "இந்திரா காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சியில் கூட பெண் நிர்வாகிகள் மறுக்கப்படுகிறார்கள்.."
சென்னை சத்தியமூர்த்திபவனில், காங்கிரஸ் நிர்வாகிகள் 2 இடங்களில் இந்திரா காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திரா காந்தியின் நினைவு தின நிகழ்ச்சியை ஒட்டி வெளியிடப்பட்ட அழைப்பிதழில் ஒரு பெண் நிர்வாகியின் பெயர் கூட இடம்பெறவில்லை. இதையடுத்து, தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் தலைமையில் பெண் நிர்வாகிகள் தனியாக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹசீனா சயத், கட்சியில் பெண் நிர்வாகிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.