TN CM Stalin | MK Stalin | முதல்வருக்கு எதிரான தேர்தல் வழக்கு - உச்சநீதிமன்றத்தில் விசாரணை
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணையை, உச்சநீதிமன்றம் நவம்பர் முதல் வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக முதலமைச்சர் ஸ்டாலின் செலவு செய்ததாக, சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்தார். அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய சைதை துரைசாமி, கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், விசாரணையை நவம்பர் முதல் வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளது.