TN CM MK Stalin Speech | "வதந்திகள் பரப்புகிறார்கள் - செயல்களால் பதிலடி தருகிறேன்"-முதல்வர் ஸ்டாலின்
மானமிகு சுயமரியாதைக்காரன் என்கிற உணர்வோடு, தி.க மாநாட்டில் பங்கேற்றதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், கருப்புச் சட்டைக்காரர்கள்தான் தமிழ்நாட்டின் காவல் காரர்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னை பற்றி வதந்தி பரப்ப பார்த்தார்கள் என்றும், ஆனால் நான் செயல்களால் மட்டுமே பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.