TN CM MK Stalin | Paddy News | நெல் கொள்முதல், பாதுகாப்பை உறுதிபடுத்த முதல்வர் உத்தரவு

Update: 2025-10-03 01:57 GMT

உழவரின் உழைப்பில் விளைந்த நெல்மணிகள் உலைக்குச் செல்லும் வரை பாதுகாக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.நெல்கொள்முதல் மற்றும் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர்கள், டெல்டா மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசுச் செயலாளர்கள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை, இருப்பு, சேமிப்பு, நகர்வு, கிடங்கு வசதி உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.வேளாண் விற்பனைத் துறை சேமிப்புக் கிடங்குகளையும், வேளாண் உற்பத்தித் துறையில் உள்ள ஒரு லட்சம் மெட்ரிக் டன் கிடங்கு வசதியினை பயன்படுத்திக் கொள்ளவும்,கொள்முதல் செய்யப்படும் நெல் உடனடியாக அரவை ஆலைகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் மேலும், டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்திடவும், கூடுதல் அலுவலர்களை அனுப்பி பணிகளை மேற்பார்வையிடவும் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், விவசாயிகளுக்கு கொள்முதல் பணி சிரமம் இன்றி நடைபெறுவதை உறுதிப்படுத்தவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். கூடுதல் இரயில்வே வேகன்கள் மூலம் பிற மாவட்டங்களுக்கு விரைந்து நெல் மூட்டைகளை அனுப்பிடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் கூடுதல் கவனத்துடன் நெல் கொள்முதலைச் சிறப்பாகச் செய்திடவும், உரத் தேவையை நிறைவு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்