வார்னிங் கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

Update: 2025-03-08 02:32 GMT

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில், பள்ளி மாணவர்களிடம் வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் 4வது புத்தக திருவிழாவினை அமைச்சர்கள் அன்பில் மகேஷ்,

நாசர் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களிடம் கையெழுத்து போடச் சொல்லி கட்டாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார். திருவள்ளூரில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்