RN Ravi Speech | ``போர் ஒரு நோக்கத்துடன் நடந்தது'' - ஆளுநர் ரவி பரபர கருத்து

Update: 2025-06-23 03:53 GMT

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி விழா - ஆளுநர் நெகிழ்ச்சி

சென்னை தரமணியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற , ஆபரேஷன் சிந்தூர் வெற்றி விழா நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி விரிவாக பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மற்ற நாடுகளை போல அல்லாமல் இந்த போர், ஒரு நோக்கத்துடன் நடைபெற்றதாக தெரிவித்தார். மேலும், வேலூர் அருகே உள்ள ராணுவப்பேட்டை கிராமத்திற்கு சென்றது குறித்து நினைவுபடுத்தி பேசிய அவர், தமிழகம் தேச சேவைக்கு தன்னை அர்பணித்துக் கொண்ட மண் என்று புகழாரம் சூட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்