விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது எனஅமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் சேத்தூர் துணை மின் நிலையத்தில் நடைபெற்ற மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் தொடக்க நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது“ என ராமநாதபுரம் மாவட்டத்தில் எண்ணெய் கிணறுக்கு அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார்.