``அறிகுறி தெரிய ஆரம்பிச்சிடுச்சு.. 2026 மிக மோசமாக இருக்கும்’’ - அண்ணாமலை ஆரூடம்
பெண்கள் பாதுகாப்பு, வளர்ச்சி உள்ளிட்ட எல்லாவற்றிலும் திமுக பின் தங்கி விட்டதாக அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார். அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.