50 சதவீதம் வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுமாறு பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்காவின் 50 சதவீதம் வரி உயர்வை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி பெற்றதக முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்து உள்ளார்.
"பிரதமர் மோடி ஆதரித்த ட்ரம்பின் வரி விதிப்பால் தமிழ்நாடு இளைஞர்களுக்கும், பல மாநில தொழிலாளர்களுக்கும் வாழ்வு அளிக்கும் 'டாலர் சிட்டி திருப்பூர்' தவிப்பதாகவும்.."
“குஜராத்தில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, எங்கள் ஏற்றுமதியாளர்களை பரிதவிக்க விடுவது நியாயமா?“ எனவும் முதல்வர் கேள்வி எழுப்பி உள்ளார்.
"அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகண்டு,
Vishwa Guru எனும் தங்கள் பட்டப் பெயருக்கு நியாயம் செய்யுங்கள்" எனக் கூறிய முதல்வர் ஸ்டாலின்..
"ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து உணர்வுகளைப் பதிவுசெய்த அனைவருக்கும் நன்றி" தெரிவித்து உள்ளார்