ராகுல் யாத்திரையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பதாக தகவல்
எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியின் பீகாரில் மேற்கொண்டு வரும் 'வாக்காளர் உரிமை யாத்திரையில்' முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகிற 26, 27 ஆகிய தேதிகளில் பிரியங்கா காந்தியும், வருகிற 27ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினும் வருகிற 29ஆம் தேதி கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதேபோல் உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் ராகுல்காந்தி யாத்திரையில் பங்கேற்பதாக தகவல் வெளியாகி உள்ளது.