"சாதியை ஒழிப்பேன் என்று சொல்லாமல், நடத்திக் காட்டியவர் முதல்வர்" - ஆ.ராசா
சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்வது மட்டுமல்லாமல், நடத்திக் காட்டுபவர் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் என திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு சென்னை சேப்பாகத்திலுள்ள கலைவாணர் அரங்கில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், காலனி என்ற சொல்லை ஒழித்ததன் மூலம், சமூக நீதி காவலராக முதல்வர் ஸ்டாலின் விளங்குவதாக அவர் தெரிவித்தார்.