TVK banner || தவெகவினர் வைத்த பேனர் - முதியவர் மீது விழும் அதிர்ச்சி வீடியோ
சென்னை வில்லிவாக்கத்தில் தவெகவினரின் பேனர் விழுந்து முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சூளைமேடு பகுதியை சேர்ந்த 75 வயதான மோகன் என்பவர் படுகாயங்களுடன் அரசு கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், மேலும் நால்வரை தேடி வருகின்றனர். இந்நிலையில் பேனர் முதியோர் மீது விழுந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.