செங்கல்பட்டு அருகே தொழில் செய்ய உதவி கேட்டவருக்கு, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆட்டோ வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலை சேர்ந்த சிவமணி என்பவர், தொழில் செய்ய உதவுமாறு அப்பகுதியை சேர்ந்த த.வெ.க நிர்வாகிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை ஏற்று, அவருக்காக த.வெ.க நிர்வாகிகள் ஆட்டோ வாங்கியுள்ளனர். இந்நிலையில், கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிவமணியை சந்தித்த த.வெ.க. பொதுச் செயலாளர் என் ஆனந்த், அவரிடம் ஆட்டோ சாவியை வழங்கினார். அப்போது ஆட்டோவில் விஜய் படம் மட்டும் இருந்தால் போது எனது படம் வேண்டாம் எனக்கூறி அவரது படத்தை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.