Minister Sivasankar | Amit shah | EPS | "இதனால் தான் அமித்ஷா கூட்டணியை அறிவித்தார்" விளாசிய அமைச்சர்
பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்க தலைவர்களை விமர்சிக்கும் மேடையில், அதிமுகவினர் அமர்ந்திருந்தது அவமானகரமான நிகழ்வு என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்ட பல்வேறு கிராமங்களில் 5 கோடியே 20 லட்ச ரூபாய் செலவில் முடிவுற்ற திட்டப் பணிகளை துவங்கி வைத்த அவர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அதிமுக என்பது அமித்ஷாவுக்கு கட்டுப்பட்ட கட்சியாக மாறி விட்டது என்றும், முருக பக்தர்கள் மாநாட்டில், திராவிட இயக்கத் தலைவர்கள் விமர்சிக்கப்பட்டது குறித்து அதிமுகவினர் யாரும் வாய் திறக்கவில்லை என்றும் தெரிவித்தார்.