Tamilnadu BJP | குடியரசு துணைத் தலைவர் CPR எடுத்த முடிவு - ஏமாற்றத்தில் தமிழக பாஜக தொண்டர்கள்

Update: 2025-10-04 04:44 GMT

துணை குடியரசு தலைவரின் தமிழ்நாடு பயணம் தற்காலிக ரத்து நாட்டின்15வது துணை குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள சி.பி. ராதகிருஷ்ணின் தமிழ்நாடு பயணம், தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.துணை குடியரசு தலைவராக தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவரான சி பி ராதகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி பதவி ஏற்றார். இதனையடுத்து, அக்டோபர் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சென்னை, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில், அவருக்கு பாராட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், அவரது தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்பட்டு, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜக தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்