காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்... பசுமை மின் உற்பத்தியை மேம்படுத்த பணிகள் நடந்து வருவதாகவும், தமிழ்நாட்டில் தனியாருக்கு சொந்தமான பழைய காற்றாலைகள் மீண்டும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்... தமிழக மின் தேவையில் 50 சதவீதம், தமிழ்நாடு மின்சாரத் துறையின் சொந்த உற்பத்தியாக உள்ளது என்றும், 74 ஆயிரத்து 815 மின்மாற்றிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்...
393 துணைமின் நிலையங்கள் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு, 116 பணிகள் நிறைவுற்றதாகவும், 64 பணிகள் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்... சூரிய சக்தியை பயன்படுத்துவதில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்...