SupremeCourt | கருணாநிதி பெயரில் நுழைவுவாயில்.. உச்ச நீதிமன்றம் சொன்ன பரபரப்பு கருத்து
நெல்லை வள்ளியூர் காய்கறி மார்க்கெட்டில் தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பெயரில் அலங்கார நுழைவாயில் அமைக்க அனுமதி கேட்டு தொடுத்த வழக்கில், மக்கள் பணத்தை செலவழித்து தலைவருக்கு சிலை வைக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தலைவர்களின் சிலைகளை ஒரே இடத்தில் அமைக்கும் வகையில் தலைவர்கள் பூங்கா அமைக்கப்பட வேண்டும் எனவும், பொது இடத்தில் தலைவர்கள் சிலை அமைக்க அரசு அனுமதி வழங்கக் கூடாது எனவும் தெரிவித்து இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மக்கள் பணத்தில் சிலை வைத்து துதிபாடக் கூடாது என தெரிவித்து தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.