பஹல்காமில் திடீர் நிறுத்தம்

Update: 2025-07-17 08:38 GMT

தொடர் மழை - அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

தொடர் மழை காரணமாக அமர்நாத் யாத்திரை ஒருநாள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்ய யாத்ரிகர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரு தினங்களாக தொடர் மழை காரணமாக, பஹல்காம் Pahalgam மற்றும் பால்டால் Baltal முகாம்களில் இருந்து அமர்நாத்துக்கு மேற்கொள்ளப்படும் யாத்திரை ஒருநாள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பஞ்ச்தர்னி முகாமில் தங்கியிருந்த யாத்ரிகர்கள் பால்டாலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும், வானிலை நிலையைப் பொறுத்து யாத்திரை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கும் என்றும், காஷ்மீர் மண்டல ஆணையர் விஜய் குமார் பிதுரி தெரிவித்தார்.

இந்நிலையில், 2 லட்சத்து 47 ஆயிரத்திற்கும் அதிகமான யாத்ரிகர்கள் அமர்நாத் குகை ஆலயத்தில் இதுவரை வழிபாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்