மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவே நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 57 மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், அதில் 50 பேர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் படித்துள்ளனர். இந்நிலையில், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு வெற்றியாளர்களுக்கான பாராட்டு விழா சென்னை அண்ணா அரங்கில், மனித வள மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், திருக்குறள் புத்தகம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். பின்னர் உரையாற்றிய முதலமைச்சர், கடந்த சில ஆண்டுகளாக யு.பி.எஸ்.சி தேர்வில் தமிழக இளைஞர்கள் தேர்வாவது குறைந்த நிலையில், தற்போது அந்தக் கவலையை மாணவர்கள் போக்கியிருப்பதாக குறிப்பிட்டார்.