SM Sugumar | ADMK | Edappadi | எடப்பாடிக்கு சர்ப்ரைஸ் தர தயாராகும் அதிமுக மா.செ. SM சுகுமார்
``MGR-க்கு கொடுத்த மாதிரி EPS-க்கும் கொடுக்கணும்’’ - சர்ப்ரைஸ் தர தயாராகும் அதிமுக மா.செ. SM சுகுமார்
அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் காவனூர் பகுதிக்கு, வருகிற 19ம் தேதி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக,, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தரவுள்ளார். இதையொட்டி, திமிரி பகுதியில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை எஸ்.எம்.சுகுமார் வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், 1972ல் அதிமுகவை உருவாக்கிய எம்.ஜி.ஆருக்கு அளித்த வரவேற்பைப்போல் எடப்பாடி பழனிசாமிக்கும் வரவேற்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்