சூசக பதில் கொடுத்து ட்விஸ்ட் கொடுத்த சசி தரூர் - புகைச்சலில் கேரள காங்கிரஸ்
சூசக பதில் கொடுத்து ட்விஸ்ட் கொடுத்த சசி தரூர் - புகைச்சலில் கேரள காங்கிரஸ்
திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் சமீபத்தில் கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசின் சில கொள்கைகளை பாராட்டியதால், அவருக்கும் அம்மாநில காங்கிரசுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக சலசலப்பு நிலவுகிறது. இந்நிலையில், எம்.பி. சசி தரூர், தனது எக்ஸ் தள பக்கத்தில், ஆங்கிலக் கவிஞர் தாமஸ் கிரேவை மேற்கோள்காட்டி, "அறியாமை பேரின்பமாக இருக்கும் இடத்தில், ஞானியாக இருப்பது தவறு" என்று பதிவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து, ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த தரூர், ஒருவேளை காங்கிரஸ் தன்னை ஓரங்கட்டினால், தனக்கு வேறு 'வாய்ப்புகள்' உள்ளன என்று சூசகமாக பேசியிருப்பதும், கேரள அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.